இங்கிலாந்துடனான அரையிறுதியில் அவுஸ்திரேலிய அணி பலப்பரீட்சை

தென்னாபிரிக்க அணியிடம் தோல்வி:

தென்னாபிரிக்காவுடனான பரபரப்பான போட்டியில் 10 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த அவுஸ்திரேலிய அணி உலகக் கிண்ண புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

ஓல்ட் டிரெபர்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் அவுஸ்திரேலிய அணி கடைசி ஓவர் வரை போராடிய நிலையில் தோல்வியை சந்தித்ததன் மூலம் அந்த அணி அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. அந்தப் போட்டி வரும் வியாழக்கிழமை எஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ளது.

326 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 95 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும் டேவிட் வோர்னர் பெற்ற சதத்தின் உதவியோடு நடப்புச் சம்பியன் வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது.

கடைசி பத்து ஓவர்களில் விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கரி அதிரடியாக ஆடி 85 ஓட்டங்களை பெற்றபோதும் வெற்றிக்காக அவுஸ்திரேலிய அணிக்கு 28 பந்துகளில் 51 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் கரியின் ஆட்டமிழப்பின் பின் ஆஸி. அணி வேகமாக ஓட்டங்களை பெற முடியாமல் போனது.

இதனால் அந்த அணி 49.5 ஓவர்களில் 315 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணிக்கு அதன் தலைவர் டூ பிளசிஸ் வேகமாக சதம் ஒன்றை பெற்றதோடு வென்டர் டூசன் 95 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 325 ஓட்டங்களை பெற்றது.

Mon, 07/08/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக