டெங்கு

நாடெங்கும் தீவிரம்

சுகாதார அமைச்சு எச்சரிக்ைக

நாட்டின் பல பிரதேசங்களிலும் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடனும் முன்னவதானத்துடனும் செயற்பட வேண்டுமென சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புக்கான வேலைத்திட்டத்தின் பேச்சாளர் டொக்டர் பிரசீலா சமரவீர நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேநேரம் சந்தேகத்திற்கிடமான வகையில் காய்ச்சல் காணப்படுமாயின் குறிப்பாக கர்ப்பிணி, சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் காய்ச்சல் ஏற்பட்ட முதல் நாளே இரத்தப் பரிசோதனையை மேற்கொண்டு காய்ச்சலுக்குரிய காரணத்தை கண்டறிந்து அதற்கு ஏற்ப மருத்துவ ஆலோசனைகளுடன்

சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

நாட்டின் பல பிரதேசங்களிலும் டெங்கு பரவிவரும் இன்றைய சூழலில் ஓரிரு நாட்கள் காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டவர்களும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுவாக மூன்று நாட்கள் காய்ச்சல் காணப்படுமாயின் டெங்கு தொடர்பில் குருதி பரிசோதனை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் கேட்பது வழமை. ஆனால் இம்முறை மூன்று நாட்களுக்கு முன்னரே சிலர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் டெங்கு நோயை கடும் காய்ச்சல் ஏற்பட்ட முதல் நாள் மேற்கொள்ளும் இரத்தப் பரிசோதனை மூலமே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். அதனால் டெங்கு பரவிவரும் தற்போதைய சூழலில் காய்ச்சல் ஏற்பட்ட முதல் நாளே இரத்தப் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது என்றும் அதனடிப்படையில் மருத்துவ ஆலோசனைகளுடன் சிகிச்சை பெற்றுக்கொள்வதும் சிறந்தது என்றார். நாட்டில் டெங்கு பரவிவரும் இன்றைய சூழலில் இவ்வருடம் ஜனவரி முதல் நேற்று வரையும் 29,123 பேர் டெங்கு நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

 

மர்லின் மரிக்கார்

Thu, 07/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை