எருக்கலம்பிட்டியில் உலர்ந்த கடலட்டைகள் மீட்பு; ஒருவர் கைது

மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக வைத்திருந்த 1018.9 கிலோ உலர்ந்த கடல் அட்டைகள் கடற்நொழில் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் புதன்கிழமை கடற்படையினர் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவை மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பபட்டார்.

இச் சோதனை நடவடிக்கையின் போது எருக்கலம்பிட்டி பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உலர்ந்த கடல் அட்டைகளை கண்டு பிடித்தனர். சுமார் 1018.9 கிலோ கிராம் உலர்ந்த கடல் அட்டைகள் மீட்கப்பட்டதோடு, வீட்டு உரிமையாரை கடற்படையினர் கைது செய்தனர்.

மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களம் அனுமதித்த அளவை மீறி, அதிக அளவு கடல் அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, உலர்ந்த கடல் அட்டைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மன்னார் குறூப் நிருபர்

Fri, 07/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை