மடவளையில் இளம் ‘ஸ்மார்ட் விளையாட்டுக்கழகம்’ உதயம்

கண்டி, மடவளையில் இயங்கும் மடவளை உதைப்பந்தாட்ட அக்கடமியுடன் இணைந்து புதிதாக ‘ஸ்மார்ட் விளையாட்டுக்கழகம்’ (SMART SPORTS CLUB ) என்ற பெயரில் பல்துறை விளையாட்டுக்ளை உள்ளடக்கிய இளம் விளையாட்டுக்கழகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மடவளை பஸாரில் முன்னர் மடவளை உதைப்பந்தாட்ட அக்கடமி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி கழகம் தற்போது ஸ்மார்ட் விளையாட்டுக்கழகம்’ என பெயரை மாற்றப்பட்டுள்ளது. இதில் தற்போது நூற்றிற்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் தம்மைப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கழகத்தின் செயலாளர் சட்டத்தரணீ எம்.எஸ். பைசர் அலி தெரிவித்ததாவது,-

மேற்படி இளம் வீரர்கள் நான்கு வயதெல்லைகளின் கீழ் அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மற்ற வீரர்களுக்காக கிக்பொக்சிங் (KICK BOXING), போன்ற இதர விளையாட்டுக்களையும் அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை மிக முக்கிய குறிக்கோள்களுடன் அது சென்று கொண்டிருக்கின்றது. இலங்கைக்கான சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதுடன் சிறந்த கல்விமான்களையும் உருவாக்குவதற்கும் இந்த மாணவச் செல்வங்களை இந் நாடு எதிர்காலத்தில் மெச்சும் வீரராகளாக மாற்றுவது போன்ற நோக்கங்களை அடைய முயற்சிக்கிறது என்றார்.

இவ் வீரர்களின் விளையாட்டு கல்வி மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்த்தல், அவர்களின் ஒழுக்க விடயங்களை கவனித்தல் போன்றன முக்கியமானதாகும். இதற்கான செலவீனங்களை இதன் தவிசாளர் கச்சிமொகமட் எம். மாஹிர் பொறுப்பேற்று நடாத்த முன்வந்துள்ளார் என்றும் கூறினார்.

மற்றும் தவிசாளர் கச்சிமொகமட் எம். மாஹிர் அவர்கள் கருத்துரைக்கையில்-,

இங்குள்ள ஒவ்வொரு வீரரும் எதிர்காலத்தில் பாரிய பெறுமதி மிக்கவர்களாக உருவாக்கப்படவேண்டும். அதற்காக அவர்களை சரியாக வழியில் எடுத்துச் செல்லவேண்டும். அப்படியாயின் மட்டுமே அவர்கள் நட்சத்திரங்களாக மிளிர்வார்கள். எனவே அதற்காக நாம் உழைக்வேண்டும். நானும் எனது குழுவும் அதற்கு தயாராகவுள்ளது. எனவே நீங்கள் உங்கள் பங்களிப்பை எமக்கு உரியநேரத்தில் வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

அத்துடன் உதவி தவிசாளர் ஏ.எல்.எம்.ரிசாட் கருத்துரைக்கையில்-,

இன்று இலங்கையில் பரவலாக போதை ஒழிப்பு பற்றி பேசப்படுகிறது. ஆனால் போதைப் பாணையில் இருந்து இனம் வயதினரைப் பாதுகாக்க இவ்வாறான விளையாட்டுத் துறைகளில் இளம் வீரர்களை உட்படுத்தினால் அனை ஓரளவு குறைக்க முடியும். அவர்களது நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும். போதை வஸ்து பாவிப்பவர்களின் தொகையை குறைக்கலாம் என்றார்.

(அக்குறணை குறூப் நிருபர்)

Wed, 07/10/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக