ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொட்டகலையில் புதிய தேசிய கூட்டணி உதயம்

ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது

மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் (11) அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், எம்பியுமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் ஆகியோர் தலைமையிலான குழுக்கள் கலந்துகொண்டன.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களை தவிர்ந்த ஏனைய சமூகத்தினருக்கு கிடைக்கும் அனைத்து சிறப்புரிமைகளும் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தேசிய கூட்டணி அங்குராப்பணம் செய்யப்பட்டது.

இதன்போது இந்த தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கக் கூடிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றின் பொதுச் செயலாளர்கள் இணைந்து உடனபடிக்கையில் கைச்சாத்திட்டனர்.

ஹற்றன் சுழற்சி, ஹற்றன் விசேட நிருபர்கள்

Fri, 07/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை