பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணை இன்று

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளது. 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரட்ன மற்றும் இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஆகியோர் இதில் சாட்சியமளிக்கவுள்ளனர். இராணுவத் தளபதி இதற்கு முன்னரும் ஒரு தடவை சாட்சியமளித்திருந்த நிலையில் இரண்டாவது தடவையாக  அவர்அழைக்கப்பட்டுள்ளார். 

அதேநேரம், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரட்னவும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்தார்.

இது தவிரவும் தெரிவுக்குழுவினால் அமைச்சர்களான சாகல ரத்னாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 6ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளார்.

ஓகஸ்ட் மாதத்துடன் தெரிவுக்குழுவின் விசாரணைகளைப் பூர்த்தி செய்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாக தெரிவுக்குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகேஸ்வரன் பிரசாத் 

Wed, 07/31/2019 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை