முறையிட்ட தாய்மார் எவரும் பலோபியன் சத்திர சிகிச்சைக்கு முன்வரவில்லை

மருத்துவர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்த தாய்மார்களில் எவரும், பலோபியன் குழாய் சத்திர சிகிச்சைக்கு முன்வரவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தி பெரேரா தெரிவித்தார்.

குருநாகல் ஆஸ்பத்திரி மருத்துவர் ஷாபி சிஹாப்தீன் சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் கருத்தடை செய்ததாக முறைப்பாடு செய்த தாய்மார்களை பரிசோதனைக்குட்படுத்த தேவையான வசதிகள் கொழும்பு காசல் ஆஸ்பத்திரி மற்றும் த சொய்சா ஆஸ்பத்திரிகளில் என்பவற்றில் செய்யப்பட்டுள்ளன.ஆனால் இது வரை எந்த ஒரு தாயும் முன்வரவில்லை எனவும் அவர் தெரிவித்தார். சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:

குருநாகல் ஆஸ்பத்திரியில் இது வரை 30 ஆயிரம் சிசேரியன் சத்திரசிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. இதில் 25 மருத்துவர்கள் பங்குபற்றியுள்ளனர். டொக்டர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆறுபேரடங்கிய மருத்துவர் குழு நியமிக்கப்பட்டது.

பல்வேறு தடைகள் காரணமாக அதன் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வு பிரிவு இது தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறது. பல குழுக்களுக்குச் சென்று சாட்சியமளிப்பது தாய்மார்ருக்கு தொந்தரவாக இருக்கும் என்பதால் சுகாதார அமைச்சு நியமித்த குழு இடைநிறுத்தப்பட்டது. இதனால் தாய்மாருக்கு பாதிப்பு ஏற்படாது. சி.ஐ.டி முன்னெடுக்கும் விசாரணையுடன் சுகாதார அமைச்சு நியமித்த குழு தொடர்புபட்டு செயற்பட்டு வருகிறது.

முறைப்பாடு செய்த தாய்மாருக்கு வழிகாட்டல் திட்டமொன்றை முன்னெடுக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

குருநாகல் நீதவானின் உத்தரவின் பிரகாரம் குருநாகல் ஆஸ்பத்திரியில் கடந்த 5 வருடங்களில் சிசேரியன் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட தாய்மார்கள் மற்றும் சத்திர சிகிச்சை நடத்திய மருத்துவர்கள் ஆகியோரை அடையாளங் கண்டு விசாரணை நடத்த வேண்டும்.

இதற்கு நான்கைந்து மாதங்கள் செல்லும் என்றும் அவர் கூறினார்.(பா)

ஷம்ஸ் பாஹிம்

Fri, 07/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை