பிரிட்டனில் நிரந்தரமாக குடியேற அமீர் திட்டம்

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முஹமது அமீர், எதிர்காலத்தில் இங்கிலாந்தில் குடியேற திட்டமிட்டுள்ளார். அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இடது கை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளராக அவர் பிரித்தானிய கடவுச்சீட்டு பெற்று நிரந்தரமாக அங்கு குடியேற திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அமீர 2016 ஆம் ஆண்டில் பிரித்தானியாவைச் சேர்ந்த நர்கிஸ் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன்மூலம் துணை விசாவுக்கு அவர் தகுதியுடையவர் என்பதால் 30 மாதங்கள் வரை இங்கிலாந்தில் தங்க அனுமதி உள்ளது.

“அவர் ஒரு பிரித்தானிய கடவுச்சிட்டை பெறவும் எதிர்காலத்தில் நிரந்தரமாக இங்கிலாந்தில் குடியேறவும் திட்டமிட்டுள்ளார்” என்று அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

துணை விசா மூலம் அவர் அரசாங்கத்தின் சலுகைகளை பெற்று சுதந்திரமாக இருக்க முடியும் என்பதால், இங்கிலாந்தில் ஒரு வீடு வாங்கவும் திட்டமிட்டுள்ளார் என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

27 வயது மட்டுமே ஆகியிருக்கும் அமீரின் இந்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2010–2011 ஆம் ஆண்டில் ஸ்பொட் பிக்ஸிங் ஆட்டநிர்ணயத்தில் சிக்கியதால் அவர் சில மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டியிருந்தது.

ஆனால் துணை விசாவில் செல்ல அது ஒரு தடை அல்ல எனவும் தெரியவந்துள்ளது.

Mon, 07/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை