விமான நிலைய வரிகளை குறைக்க பிரதமர் அறிவுரை

விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் உள்ளிட்ட சில சேவைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்களைக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கிணங்க சென்னை விமான நிலையத்தில் நடைமுறையிலுள்ள விமான எரிபொருள் விலைக்கு சமமான வகையில் விமான எரிபொருளுக்கான விலையை குறைப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கை, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு ஆலோசனை வழங்கப்படவுள்ளது.

நாட்டின் சுற்றுலாத்துறை சில ஆண்டுகளாக தேசிய உற்பத்தியில் 4.5 சதவீதத்திற்கு மேற்பட்ட தொகையை வருமானமாகப் பெற்று வந்துள்ளது.

எனினும், உயிர்த்த ஞாயிறு நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் காரணமாக சுற்றுலாத் தொழில்துறை பெரும் பாதிப்புக்குள்ளானது.

இந்த துறையை மீண்டும் கட்டயெழுப்புவதற்காக இலங்கைக்கான விமான பயணங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்தல், விமான நிறுவனங்களுக்கு அவற்றின் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கக்கூடிய வகையில் அதிகளவிலானோர் சுற்றுலாக்களில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்,

அதேவேளை, வெளிநாடுகளுக்குச் செல்லும்போது செலுத்தப்பட வேண்டியுள்ள வரியை (Embarkation Levy) 10 அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பது தொடர்பான வரவு செலவுத்திட்ட முன்மொழிவை இடை நிறுத்துதல் போன்ற ஆலோசனைகள் பிரதமரின் பரிந்துரையில் உள்ளடங்கியுள்ளன.

இந்த பரிந்துரைகளை ஆறு மாத காலத்துக்கு நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 07/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை