ஸ்பெயினில் காளை அடக்கும் நிகழ்ச்சி ஆரம்பம்: மூவர் காயம்

ஸ்பெயினின் பெம்ப்லோனா நகரில் நடந்த வருடாந்த காளை அடக்கும் நிகழ்ச்சியின் முதல் நாளில் மூன்று பேரை மாடுகள் கொம்புகளால் குத்திக் காயப்படுத்தியுள்ளன.

மேலும் இருவர் தலையில் ஏற்பட்ட காயங்களுக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்். 53 பேருக்குச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் முதலுதவி சிகிச்சையளித்தனர்.

வரும் ஞாயிறுவரை காலை நேரத்தில் நகரின் குறுகலான வீதிகளில் காளை அடக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

850 மீற்றர் நீளமுள்ள பாதையில் வெள்ளை உடையும், சிவப்புக் கழுத்துப் பட்டையும் அணிந்த ஆடவர்கள் காளை அடக்கும் நிகழ்ச்சியில் பங்கெடுக்கக் காத்திருப்பர். ஒவ்வொரு நாளும் 6 காளைகள் விடுவிக்கப்படும்.

காளைச் சண்டையில் கைதேர்ந்தவர்கள் துரத்திச் சென்று இறுதியில் அவற்றை அடக்குவர்.

இந்நிகழ்ச்சியில் சிலர் காயமடைவது வழக்கம் என்றாலும், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை.

Tue, 07/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை