பாணின் விலையை பழைய விலைக்ேக விற்பனை செய்ய பேக்கரி சங்கம் முடிவு

அதிகரிக்கப்பட்ட 400 கிராம் நிறையுடைய பாண் இறாத்தல் ஒன்றின் விலையை மீண்டும் பழைய விலைக்கே விற்பனை செய்ய அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கோதுமை மா ஒரு கிலோ 08 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 400 கிராம் கொண்ட பாண் இறாத்தல் ஒன்றின் விலையை, 05 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ள தாக நேற்றுமுன்தினம் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. அதன் பிரகாரம் நேற்று பாண் ஒன்று 70 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் அதிகரிக்கப்பட்ட விலையை மீண்டும் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று தெரிவித்துள்ளது.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 8 ரூபாவால் அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Fri, 07/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை