கொங்கோவில் எபோலா பாதிப்பு: சர்வதேச சுகாதார அவசரநிலை

கொங்கோ ஜனநாயக குடியரசில் ஏற்பட்டிருக்கும் எபோலா தொற்றுக் குறித்து சர்வதேச சுகாதார அவசர நிலை ஒன்றை உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்துள்ளது.

செல்வந்த நன்கொடையாளர்களிடம் இருந்து அதிக நிதியை பெறுவதை ஊக்குவிப்பதற்கு இந்த பிரகடனம் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் எல்லைகள் மூடப்பட வேண்டும் என கோருவதை தவிர்த்திருக்கும் உலக சுகாதார அமைப்பு இந்த நோய் பிராந்தியத்திற்கு வெளியில் பரவும் ஆபத்து குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதற்கு முன் எபோலா வைரஸினால் கொங்கோவில் 1,600க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கோமாவில் மீண்டும் இந்த நோய் தொற்று இந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறான அவசரநிலை உலக சுகாதார அமைப்பினால் இதற்கு முன்னர் நான்கு முறை மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளது. 2014 தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை மேற்கு ஆபிரிக்காவின் ஒரு பகுதியில் இந்த வைரஸினால் 11,000க்கும் அதிகமானோர் உயிரிழந்து பேரழிவு ஏற்பட்டபோதும் இவ்வாறான பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

“உலகம் அவதானம் செலுத்த வேண்டிய நேரமாக இது உள்ளது” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கம்ரியேசுஸ் ஜெனிவாவில் கடந்த புதனன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

Fri, 07/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை