சவூதிக்கு ஆயுதங்கள் விற்பதை தடுக்கும் செனட் முயற்சி தோல்வி

சவூதி அரேபியாவுக்கு 8.1 பில்லியன் டொலர் பெறுமதியான சர்ச்சைக்குரிய ஆயுத விற்பனையை தடுக்கும் அமெரிக்க செனட் சபையின் மற்றொரு முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்த ஆயுத விற்பனையை தடுப்பதற்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும் அதற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தை பிரயோகித்தார்.

இந்த ஆயுதங்கள் யெமன் போரில் பொதுமக்கள் மீது பயன்படுத்தப்படலாம் என்று பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. எனினும் இதனைத் தடுப்பது அமெரிக்காவின் சர்வதேச போட்டித் தன்மையை பலவீனப்படுத்தும் என்று டிரம்ப் வாதிட்டு வருகிறார். இந்நிலையில் டிரம்பின் வீட்டோவை ரத்துச் செய்வது குறித்து செனட்டில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு வாக்குகளை வெல்ல தவறியுள்ளது.

இதில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சிக்கு 45 பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தபோதும் ஜனாதிபதியின் வீட்டோவை ரத்துச் செய்வதற்கு தேவையான மூன்றில் இரண்டு வாக்குகள் கிடைக்கவில்லை.

Wed, 07/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை