துறைநீலாவணை எதிரொலி விளையாட்டுக்கழகம் சம்பியன்

துறைநீலாவணை சுப்பர் கிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 17 ஆவது ஆண்டு நிறைவையிட்டு மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி, பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில்(21) இடம்பெற்றது.

கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்ற இக் கிரிக்கெட் சுற்றப்போட்டியில் மட்டு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து 32 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தது.

சுப்பர் கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தலைவர் சு.மனோராஜ் தலைமையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில், மட்டு பழுகாமம் சூட்டின்ஸ் ஸ்டார்ன்ஸ் கழகமும் அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி ஏழாம் கிராம எதிரொலி விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன.

அணிக்கு எட்டு ஓவர்கள் கொண்ட போட்டியில் பழுகாமம் சூட்டின் ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழகம் 88 ஓட்டங்களையும் அம்பாறை ஏழாம் கிராமம் எதிரொலி விளையாட்டுக்கழகம் 89 ஓட்டங்களையும் பெற்றிருந்தது.

இதில் ஏழாம் கிராம எதிரொலி விளையாட்டுக்கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

பிரதம அதிதியாக கலந்துகொண்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் க. சரவணமுத்து முதலாம் இடம்பெற்ற கழகத்திற்கு 20 ஆயிரம் ரூபா பணப்பரிசினையும் வெற்றிக்கேடயத்தினையும் இதன்போது வழங்கி வைத்தார்.

மண்டூர் குறூப் நிருபர்

Sat, 07/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை