மோர்தசாவுக்கு பதில் பங்களாதேஷ் அணித்தலைவராக தமிம் நியமனம்

பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபீ மொர்தசா தொடை தசைப்பிடிப்பு உபாதை காரணமாக இலங்கை அணிக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணி, இலங்கை தொடருக்கு முன்னதான இறுதி பயிற்சியினை தங்களுடைய நாட்டில் மேற்கொண்டிருந்த நிலையில், மொர்தசாவின் தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு உபாதை ஏற்பட்டுள்ளதாக பங்களாதேஷ் அணி நிர்வாகம் சுட்டிக்காட்டியது.

தற்போது மஷ்ரபீ மொர்தசா அணியிலிருந்து வெளியேறியுள்ளதால், அவருக்கு பதிலாக அணியின் தலைவராக அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் பங்களாதேஷ் அணியின் தலைவராக இவர் செயற்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மொர்தசாவின் உபாதை குறித்து அந்த அணியின் உயர் மருத்துவ அதிகாரி குறிப்பிடுகையில், “மஷ்ரபீ மொர்தஸாவின் உபாதை தரம் ஒன்று உபாதை என்பதுடன், குறித்த உபாதையானது மீண்டும் மீண்டும் தோன்றுவதாக இருக்கிறது. அதனால், அவரால் நான்கு வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாது” என்றார்.

Mon, 07/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை