சுவீடனில் சிறிய விமானம் விழுந்து ஒன்பது பேர் பலி

சுவீடனில் விமானப் பயிற்சியின் போது விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.

உமியா எனுமிடத்தில் பரசூட்டில் இருந்து குதிக்கும் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்த போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பரசூட் மூலம் அதில் இருந்த வீரர்கள் குதிக்க முயற்சித்தனர்.

ஆனால் அதற்குள் விமானம் தரையில் மோதியதால் 9 பேரும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர். விமானம் விழுந்து நொறுங்கும் காட்சியை சிலர் கைபேசிகளில் படம் பிடித்துள்ளனர். அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

“அபூர்வமான சத்தத்தை கேட்டேன், அது சாதாரண சத்தமாக இருக்கவில்லை. மேலே பார்த்தபோது விமானம் ஒன்று சுழல்வதைக் கண்டேன்” என்று சம்பவத்தைப் பார்த்த ஒருவர் பத்திரை ஒன்றுக்கு குறிப்பிட்டார்.

Tue, 07/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை