இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு அழைப்பு

அவுஸ்திரேலிய அணியுடனான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பிரபலமான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.

உலகக் கிண்ணத்தில் சிறப்பாக பந்துவீசிய வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜோ ரூட் தலைமையிலான அணியில் மொத்தம் 14 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் ஓகஸ்ட் 1ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இங்கிலாந்து (முதல் டெஸ்ட்): ஜோ ரூட் (தலைவர்்), மொயீன் அலி, ஜேம்ஸ் அண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜோனி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிரோடு, ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் காப்பாளர்), சாம் கரன், ஜோ டென்லி, ஜேசன் ரோய், பென் ஸ்டோக்ஸ், ஓலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

Mon, 07/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை