சைக்கிளை சோதனையிட்ட பொலிஸார் மீது தாக்குதல்

பிரதேச மக்கள் ஒன்று கூடியதால் புதூர் பகுதியில் குழப்பம், பதற்றம்

ரதி அனுமதிப்பத்திரமின்றி பயணித்த மோட்டார் சைக்கிளொன்றை சோதனைக்குட்படுத்திய பொலிஸார், அதனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்கையில் பிரதேச மக்கள் சிலர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி கைத்துப்பாக்கி ஒன்றையும் பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.இந்த சம்பவம் மட்டக்களப்பு புதூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பொலி ஸார் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சாரதி அனுமதிப்பத்திரமின்றி பயணித்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்கையில் மோட்டார் சைக்களில் வந்த இருவர் இடைவழியில் பொலிஸாரை வழிமறித்துள்ளனர்.இதன் போது இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் கிழே விழுந்துள்ளது.இச்சமயம் அந்த இடத்திற்கு வந்த பிரதேச மக்கள் சிலர், இரு பொலிஸாரையும் தாக்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதே வேளை மட்டக்களப்பு புதூர் சிமில தீவுப் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை தடுத்து நிறுத்துவதற்கு போக்குவரத்து பொலிஸார் முயற்சித்ததையடுத்தே இந்த பிரச்சினை ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நிறுத்தாமல் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளானதாகவும் இதனைத் தொடர்ந்து இப் பகுதியில் ஒன்று சேர்ந்த இளைஞர்கள் சிலர் போக்குவரத்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதால் புதூர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு படையினர் 3 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெரியபோரதீவு தினகரன், புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள்

Fri, 07/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை