டிரம்பின் இனவாத கருத்துகளுக்கு பிரதிநிதிகள் அவையில் கண்டனம்

நான்கு கொங்கிரஸ் பெண் உறுப்பினர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட இனவாத கருத்துக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“வெள்ளையினர் அல்லாதவர்கள் மற்றும் புதிய அமெரிக்கர்களிடையே டிரம்பின் இந்த இனவாத கருத்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தில் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த கொங்கிரஸ் பெண்களை நாட்டை விட்டு வெளியேறும்படி டிரம்ப் கூறியது இனவாதம் மற்றும் வெளிநாட்டினர் மீதான வெறுப்பை காட்டுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை அடுத்து டிரம்ப், “எனது உடலில் இனவாத இரத்தம் ஓடவில்லை” என்று குற்றச்சாட்டை மறுத்து ட்லிட் ஒன்றை பதிவு செய்திருந்தார்.

இதேவேளையில் திங்கட்கிழமையன்று டிரம்ப் வெளியிட்ட ட்வீட்டுகளை புறந்தள்ளிய இந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், இது டிரம்பின் திசை திருப்பும் வேலை என்றும், மக்கள் இந்த சமூகவலைதள பதிவுகளில், கவனம் செலுத்துவதைவிட அவர் கொள்கைகள் குறித்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் இது தொடர்பில் ஜனநாயகக் கட்சியினரின் ஆதிக்கத்தில் உள்ள பிரதிநிதிகள் அவையில் கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற விவாதம் அதிக இழுபறி கொண்டதாக நீடித்தது. இந்த வாக்கெடுப்பு மரபை மீறுவதாக உள்ளது என்று பல குடியரசு கட்சியினரும் வாதிட்டனர்.

எனினும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 240 வாக்குகள் பாதிவானதோடு எதிராக 187 வாக்குகள் இடம்பெற்றன.

டிரம்பின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பிகர்கள் மற்றும் சுயாதீன உறுப்பினர் ஒருவர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த கண்டனத் தீர்மானம் ஒரு கருத்து நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது என்றபோதும் சட்ட ரீதியானா கடப்பாடு கொண்டதல்ல என்பதோடு அமெரிக்க ஜனாதிபதி ஒருவக்கு எதிரான இவ்வாறான தீர்மானம் மிக அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஞாயிறுக்கிழமையன்று வெளியிட்ட தொடர் ட்வீட்களில், கொங்கிரஸ் சபையின் பெண் உறுப்பினர்களான அலெக்ஸ்சாண்ட்ரியா ஒகாஸியோ கோர்டெஸ், இல்ஹான் ஓமர், ஐயானா ப்ரெஸ்லி மற்றும் ரக்ஷிதா ட்லாய்ப் ஆகிய நால்வரின் பூர்விக நாட்டில் தற்போதுள்ள அரசுகள் முழுவதும் பேரழிவு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளன என்றும் “இவர்கள் நால்வரும் தங்களது நாடுகளுக்கு திரும்பி செல்ல வேண்டும்” என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ஆரம்பத்தில் அவர் வெளிட்ட ட்வீட் பதிவுகளில் நேரடியாக மேற்கூறிய பெண் உறுப்பினர்களின் பெயரை குறிப்பிடவில்லை, ஆனால் அவர் குறிப்பிடுவது ஜனநாயக கட்சியின் இந்த பெண் உறுப்பினர்கள் குறித்து தான் என்று விரைவில் புலப்பட்டது.

டிரம்புக்கு எதிராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடனே, அவரை பதவி நீக்க கோரும் தீர்மானம் கொண்டுவர ஜனநாயக கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் அல் கிரீன் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.

ஆனால் இவருக்கு ஆதரவாக இதேகட்சியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவு தந்த நிலையிலும் இந்த வேண்டுகோளை ஜனநாயக கட்சியின் தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை.

“அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே” என்ற கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து வரும் டிரம்ப், இதனால் பிற நாடுகளில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்றவர்கள் மீது இனவெறி கருத்துகளை பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி ஒருவரை கண்டித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் நான்காவது தீர்மானமாக இது உள்ளது. இதற்கு முன்னர் சர்ச்சைக்குரிய செனட் தேர்தல் ஒன்றில் செல்வாக்கு செலுத்த முயன்றதாக 1912 இல் வில்லியம் ஹொவார்ட் டப்டுக்கு எதிராக வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.

தற்போதைய கண்டனத் தீர்மானம் ஜனநாயகக் கட்சி சபாநாயகர் நான்சி பெலோசியினால் கொண்டுவப்பட்டது. “வெள்ளை மாளிகையில் இருந்து வந்த இந்தக் கருத்து அவமதிக்கத்தக்கது மற்றும் அருவருக்கத்தக்கது. இந்தக் கருத்து இனவெறி கொண்டது” என்று பெலோசி விவாதத்தின்போது குறிப்பிட்டார்.

இந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக உத்தியோகபூர் அவணத்தில் இருந்து பெலோசியின் கருத்தை அகற்றுமாறு கோரி குடியரசு உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இதனிடையே இனவெறியை வெளிப்படுத்தும் விதமாக தாம் கருத்து தெரிவிக்கவில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவை தாயகமாக ஏற்றுக் கொண்டவர்கள் நாட்டை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே கூறியதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 07/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை