உலக கிண்ண வலைப்பந்து இன்று இங்கிலாந்தில் ஆரம்பம்

இலங்கை - சிம்பாப்வே மோதல்

உலக கிண்ண வலைப்பந்து போட்டித் தொடர் இன்று 12ம் திகதி லீவர்பூலில் ஆரம்பமாகவுள்ளது. அன்றைய தினம் இலங்கை அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான போட்டி இலங்கை நேரப்படி மாலை 4.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கை அணி பங்குகொள்ளும் போட்டி மாத்திரம் தேசிய ரூபவாஹினியூடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

உலக கிண்ண வலைப்பந்தாட்ட போட்டியில் கலந்துகொள்ளும் இலங்கை அணியினர் 08ம் திகதி லிவர்பூர் நகரை சென்றடைந்ததுடன் அன்றைய தினம் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

பதினாறு அணிகள் கலந்து உலக கிண்ண வலைப்பந்தாட்ட போட்டித் தொடருக்கா பயிற்சிகளுக்காக இலங்கை அணி ஒன்றரை வாரங்களுக்கு முன்னரே இங்கிலாந்தின் லண்டன் நகரை சென்றடைந்து. அங்கு பல பயிற்சி போட்டிகளிலும் கலந்துகொண்டார்கள். அதனை வெற்றிகரமாக பூர்த்தி செய்த அவர்கள் 08ம் திகதி லிவர் பூல் நகரை சென்றடைந்தனர். அங்கு பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கை அணி லிவர்பூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள சம்புத்த விஹாரைக்கு சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்கள்.

அணியின் அனைத்து வீராங்கனைகளும், முகாமையாளர் டிக்ஸி நாணயக்கார பயிற்சியாளர் திலகா ஜினதாச மற்று டொக்டர் தமிந்த அத்தநாயக்க ஆகியோரும் இணைந்திருந்தார்கள்.

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் தலைவி சதுரங்கி ஜயசூரிய தனது அணி எவ்வாறாயினும் முதல் 10 அணிகளுக்குள் வரவே முயற்சி செய்வதாகவும் அதற்காக அர்ப்பணிப்புடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் சிம்பாப்வே மற்றும் வட அயர்லாந்து அணிகளுடன் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெற தமது அணி தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவை ஜூலை 14ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.

இலங்கை அணியின் பயிற்சியாளர் திலகா ஜினதாச தனது அணியின் வீராங்கனைகள் வெற்றிக்காக நல்ல மனநிலையில் காணப்படுவதாகவும் ஒவ்வொரு போட்டியையும் திட்டமிட்டு உலக கிண்ண இலங்கை அடைய எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இலங்கை வலைப்பந்தாட்ட அணி

சத்துரங்கி ஜயசூரிய (அணித் தலைவி), கயனி திசாநாயக்க (உதவி அணித் தலைவி), தர்ஜினி சிவலிங்கம், தர்ஷிகா அபேவிக்ரம, ஹசித்தா மெண்டிஸ், தீப்பிகா தர்ஷனி, திலினி வத்தே கெதர, கயாஞ்சலி அமரவன்ச, நௌஷாலி ராஜபக்ஷ, துலங்கி வன்னிதிலக்க, துலங்கா தனஞ்சி, எலிழேந்தி சேதுகாவலர்.

Fri, 07/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை