பிரபல கால்பந்து வீரர் பேல் சீன கழகத்தில் சேர வாய்ப்பு

ரியல் மெட்ரிட் கால்பந்து அணியின் முன்னணி வீரரான கேரத் பேல் சீனாவில் உள்ள ஜியாங்சு சுனிங் அணிக்கு விளையாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேல், ஜியாங்சு அணிக்காக 3 ஆண்டுகள் விளையாட ஒப்பந்தம் செய்யப்படும் என்றும் அதன்மூலம் அவருக்கு வாரம் 1.2 மில்லியன் டொலர் சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ரியல் மெட்ரிட் அணியை விட்டு பேல் விரைவில் வெளியேறப்போவதாகவும் அதன் பயிற்றுவிப்பாளர் ஸிடேன் தெரிவித்திருந்தார்.

சீனாவில் தற்போது கால்பந்து மோகம் அதிகரித்து வருவதால், பல பிரபலமான வீரர்கள் சீனக் கால்பந்து அணிகளுடன் பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்துவருகின்றனர்.

Mon, 07/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை