தவறான குழந்தையை பெற்ற அமெரிக்க தம்பதி வழக்கு

அமெரிக்காவின் செயற்கை கருத்தரிப்பு முறையில் தம்பதி ஒன்றுக்கு தவறான குழந்தை கருத்தரிப்புச் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிராக அந்தத் தம்பதி கலிபோர்னிய கருவுறல் மருத்துவமனை ஒன்றின் மீது வழக்குத் தொடுத்துள்ளனர். ஆசிய பூர்வீகம் கொண்ட இந்த தம்பதியருக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் தமது பூர்வீக ஜாடைக்கு மாறாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது பற்றி மேற்கொள்ளப்பட்ட மரபணுச் சோதனையிலும் அந்தக் குழந்தைகள் குறித்த தம்பதியுடன் தொடர்புபட்டதல்ல என்பது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தக் குழுந்தைகளை ஏற்பதையும் அவர்கள் மறுத்துள்ளனர்.

பல ஆண்டுகள் இயற்கையாக கருவுறும் முயற்சி தோல்வி அடைந்தததை அடுத்து இவர்கள் 100,000 டொலர்கள் செலவிட்டு செயற்கையாக குழந்தை பெற்றுள்ளனர்.

இவ்வாறான செயற்கை கருவுறும் முறை மூலம் பெண்ணின் உடலுக்கு வெளியில் இருந்து முட்டை ஒன்றை பெண்ணின் கருப்பையில் செலுத்தி வளரச் செய்வதாகும்.

எனினும் விவகாரம் தொடர்பில் குறித்த மருத்துவமனை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Wed, 07/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை