தொலைதூர ‘ரியுகு’ சிறுகோளில் ஜப்பான் விண்கலம் தரையிறக்கம்

தொலைதூர சிறுகோள் ஒன்றில் ஜப்பானிய விண்கலம் ஒன்று தரையிறங்கியுள்ளது. அது அந்தக் சிறுகோளில் இருந்து விண் கல்லை எடுத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சூரிய குடும்பம் எவ்வாறு உருவானது என்பது தொடர்பான தடயங்களை கண்டறிய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் ரியுகு என்ற சிறுகோளில் வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து ஜப்பான் விண்வெளி நிலையத்தின் அதன் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் கரகோசமிட்டு கொண்டாடினர்.

ஆளில்லா ஹயபூசா-2 விண்கலம் சிறுகோளில் தரையிறங்குவது இரண்டாவது தடவையாகும். இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரியிலும் சிறு கோளில் தரையிறங்கியது.

ரியுகுவின் பள்ளத்தாக்கு ஒன்றில் இந்த விண்கலம் தரையிறங்கியதை அடுத்து அங்கு சிறு கற்களை சேகரிக்க ஆரம்பித்தது. இந்த கற்கல் மூலம் சூரிய குடும்பம் எவ்வாறு உறுவானது என்பதற்காக தடயங்களை பெற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த மாதிரிகளை அடுத்த ஆண்டு பூமிக்கு எடுத்துவர ஹயபூசா-2 விண்கலம் திட்டமிட்டுள்ளது.

ரியுகு சிறுகோள் பழமையான வகை விண் கல்லாக கருதப்படுவதோடு அது எமது சூரிய குடும்பத்தின் ஆரம்பத்தில் விடுபட்ட ஒன்றாக நம்பப்படுகிறது. எனவே 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சூழல் மற்றும் இரசாயன அம்சம் பற்றிய தடயங்கள் இந்த சிறுகோளில் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இது பூமியில் இருந்து 290 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் இருப்பதோடு 900 மைல் அகலம் கொண்ட விண் கல்லாகும். இந்த சிறுகோளை அடைவதற்கான பயணத்தை 2014 ஆம் ஆண்டிலேயே ஹயபூசா-2 விண்கலம் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 07/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை