கம்பெரலிய திட்டம் முறையாக நடந்தால் அடுத்த கட்ட பணிகளுக்கு மேலதிக நிதி

பிரதமர் அறிவிப்பு

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனைத்தையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் நிறைவு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சகல அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறார்.  

கம்பெரலிய வேலைத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள 200மில்லியன் ரூபா உரிய முறையில் செலவு செய்யப்பட்டதன் பின்னர் அடுத்த கட்டப் பணிகளுக்காக மேலும் நிதியொதுக்கித் தரப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.  

எண்டர் பிரைஸஸ் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் மத்திய தர தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கும் முதல் நடவடிக்ைகயின்போது காணப்பட்ட குறைபாடு நிவர்த்தி செய்ய நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் அவ்வாறான தவறுகள் இடம்பெறாத வகையில், நடந்து கொள்ளுமாறும் பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.  

எதிர்வரும் மாதங்களில் அபிவிருத்தி வேலைகளுக்கு மேலும் அதிகரித்துச் செயற்பட போதுமான அளவு நிதியொதுக்க தீர்மானித்திருப்பதாகவும் பிரதமர் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.  

எம். ஏ. எம். நிலாம் 

Sun, 07/07/2019 - 15:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை