அப்பாவிகளின் விடுதலையின் பின்னரே அமைச்சுக்களை பொறுப்பேற்க தீர்மானித்தோம்

அப்பாவி முஸ்லிம்கள் விடுதலை செய்யப்பட்ட பின்னரே, அமைச்சுப்பதவிகளை எடுப்பதற்கான தீர்மானத்தை எடுத்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

ஏறாவூர்ப் பிரதேசத்தில் ஆறு மாதகால தையல் பயிற்சி நெறியை பூர்த்திசெய்த யுவதிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் பேசியதாவது:

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீள பதவிகளை ஏற்றுக்கொள்ளும் விடயமே தற்போதைய முகநூல் ஜாம்பவான்களின் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எமக்கில்லை. என்றாலும் சமூகத்தின் தெளிவிற்காக யதார்த்தத்தைப் பேசவேண்டியுள்ளது. கண்டி போகம்பறை மைதானத்தில் நடைபெற்ற இனவாதக்கூட்டம், அதேபோன்று சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம், பாதயாத்திரைகள்அனைத்தும் முஸ்லிம்களுக்கு எதிரானதாகவே இருந்தன. முஸ்லிம்களின் பாதுகாப்பு, சொத்துக்களுக்கு ஆபத்து ஏற்படயிருந்த அந்த நேரத்தில் சமூக ஒற்றுமையை வெளிக்காட்ட அமைச்சுப் பதவிக ளைத் துறந்தோம். அரசாங்கத்திடம் நாம் முன்வைத்த கோரிக்கைகளையடுத்து அப்பாவி முஸ்லிம்கள் விடுதலையாகினர்.

டாக்டர் ஷாபியும் விடுதலை யாகும் சாத்தியமே இருந்தது. வெளியே அவரது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இருக்காததால் நிலைமை மாற்றமடைந்தது.அப்பாவிகளின் விடுதலை குறித்தே நாம் பேசுவோம். பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. சிறுபான்மையி ருக்குப் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளரை எமது கட்சி ஆதரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

வாழ்வாதார அபிவிருத்திட்டத்தின்கீழ் ஏறாவூர் நகர் பிரதேசத்தில் ஆரம்பிக்கப் பட்ட தையல் பயிற்சி நிலையத்தில் ஆறுமாத கால பயிற்சியை புர்த்தி செய்த இங்கு சான்றிதழ்களும் தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

(ஏறாவூர் குறூப் நிருபர்)

Tue, 07/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை