கறுப்பு ஜூலை எம்மால் வெள்ளை ஜூலையாக மாற்றப்பட்டுள்ளது

மாத்தறை தினகரன் நிருபர்

எமது நாட்டில் ஜூலை மாதம் நடந்த இனக்கலவரத்தால் 36 ஆண்டுகளுக்கு முன் கறுப்பு ஜூலையாக கருதப்பட்ட ஜூலை மாதம் இன்றைய அரசாங்கத்தின் கீழ் வெள்ளை ஜூலை மாதமாக மாறியுள்ளது. இந்த மாதத்தில் சகல தரப்பினருக்கும் வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்களுக்கு இந்த மாதம் முதல் 2500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாத்தறை பள்ளிமுல்லையில் சதொச விற்பனை நிலையமொன்றை நேற்று முன்தினம் திறந்து வைத்துப் பேசுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது 422 ஆவது சதொச கிளையாகும்.

இவ்வைபவத்தில் அமைச்சர் மேலும் கூறியதாவது :

அரசாங்க ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கணிசமான தொகை ஓய்வூதியம் இந்த மாதத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நிலவி வந்த ஓய்வூதியக் கொடுப்பனவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் மூலம் நியமிக்கப்பட்ட சம்பள ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கிணங்கவும் சம்பளங்கள் அதிகரிக்கப்பட விருக்கின்றன. நாடு பூராவும் 86,000 அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கம்பெரலிய திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதிக்கும் 30 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் 10 கோடி ரூபா ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்படவிருக்கின்றன.

இந் நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை பதிலமைச்சர் புத்திக பதிரனவும் உரையாற்றினார்.

Mon, 07/08/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக