தமிழ் கூட்டமைப்பின் ஆதரவுடன் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்போம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கொள்ள இருப்பதாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அரசிற்கு இன்னும் பெரும்பான்மை பலம் இருப்பதை நிரூபிக்க தயாராக உள்ளதாக கூறிய அவர், அரசை கவிழ்க்கும் மஹிந்த தரப்பு முயற்சி படுதோல்வியில் முடியும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா

பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இடம்பெற இருக்கிறது. இது தொடர்பில் வினவியதற்கு பதிலளித்த அவர்,

ஆளும் தரப்பில் உள்ள சகல கூட்டுகட்சிகளினதும் த.தே.கூ யினதும் ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளில் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க தயாராக இருக்கிறோம்.த.தே.கூவின் ஆதரவு எமக்கு கிடைக்கும்.கடந்த காலங்களிலும் த.தே.கூ எமக்கு ஆதரவு வழங்கியது. ஆட்சியை கவிழ்க்கும் மஹிந்த தரப்பின் முயற்சி கடந்த காலத்தில் படுதோல்வியடைந்தது.இம்முறையும் அவர்களின் முயற்சியை தோற்கடிப்போம் என்றும் அவர் கூறினார்.

இதே வேளை, இந்த நம்பிக்கையில்லா பிரேணைக்கு முன்னதாக நடைபெறும் சு.க மத்திய குழு கூட்டத்தில் இது தொடர்பில் முடிவு எடுப்பதாக சு.க செயலாளர் தயாசிரி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை ​யே சு.க எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். அரசின் தலைவராக ஜனாதிபதி செயற்படும் நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் சில சு.க எம்.பிகள் பங்கேற்க மாட்டார்கள் என அறிய வருகிறது. ஜே.வி.பியும் ஒன்றிணைந்த எதிரணியும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதலை முறியடிக்க அரசாங்கம் தவறியமை பொருளாதார பின்னடைவு,செயற்திறனின்மை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஜே.வி.பி இந்த நம்பிக்கையில்லா பிரேணையை முன்வைத்துள்ளது.(பா)

Mon, 07/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை