செரீனா, ஹாலெப், ஸ்விட்டோலினா, காலிறுதிக்கு முன்னேற்றம்

முதல்தர வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் நடைபெற்றது. ஒரு ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் சுவாரஸ் நவர்ரோவை எதிர்கொண்டார். இதில் செரீனா வில்லியம்ஸ் 6--2, 6--2 என எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் 15 வயதே ஆன கோரி காஃப்-ஐ எதிர்கொண்டார். இதில் ஹாலெப் 6--3, 6--3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

8-ம் நிலை வீராங்கனையான ஸ்விட்டோலினா 6--4, 6--2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். சீன வீராங்கனை ஷாங் 6--4, 1--6, 6--2 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அஷ்லே பார்ட்டி தரநிலை பெறாத அமெரிக்காவைச் சேர்ந்த அலிசன் ரிஸ்க்கை எதிர்கொண்டார்.

இதில் அஷ்லே அதிர்ச்சி அளிக்கும் வகையில் 6--3, 2--6, 3--6 என தோல்வியடைந்து வெளியேறினார்.

Wed, 07/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை