ஆஸி. மாணவன் வடகொரியாவில் வேவு பார்த்ததாக குற்றச்சாட்டு

வட கொரியாவில் சில நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய மாணவர் வேவு பார்த்ததாக வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 வயது மாணவர் அலெக் சிக்லி பத்திரிகைகளுக்காக வேவு பார்த்ததாக வட கொரியா கூறியது. அலெக் சிக்லி ஒரு வாரத்திற்கு முன்னர் வட கொரியாவில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சுவீடனின் உதவியை நாடிய அவுஸ்திரேலியா சிக்லியை இரண்டு நாட்களுக்கு முன் மீட்டது.

அலெக் சிக்லி வட கொரியாவின் கிம் இல் சங் பல்கலைக்கழகத்தில் கொரிய இலக்கியம் பயின்றவர்.

வட கொரியாவுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனத்தையும் அவர் நடத்தி வந்தார். கொரிய மொழியைச் சரளமாகப் பேசும் ஆற்றல் படைத்தவராக அவர் உள்ளார்.

அலெக் சிக்லியின் கட்டுரைகளை வெளியிடும் இணையத் தளங்களில் ஒன்றான என்.கே நியூஸ், அவர் வேவு பார்த்ததாகக் கூறப்படுவதை நிராகரித்தது.

பியோங்யாங்கின் இயல்பான வாழ்க்கை முறையைத்தான் அவர் கட்டுரைகளில் எழுதிவந்ததாக அது குறிப்பிட்டது.

Mon, 07/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை