பொத்துவில் கொட்டுக்கல் வீதி அமைச்சர்களால் திறந்து வைப்பு

பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறுகம்பை சுற்றுலாத்துறை பிரதேச கொட்டுக்கல் வீதி நேற்றுமுன்தினம் (21) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

அறுகம்பை பிரதேச சுற்றுலாத்துறை தலைவர் எம்.எச்.றகீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ,சுற்றுலாத்துறை அபிவிருத்தி வனவளதுறை மற்றும் கிறிஸ்தவ கலாசாரவிவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சர் தயாகமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் தயாகமகே, பயங்கரவாதிகளை முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பின் மூலமே அழிக்கமுடிந்தது. அந்தவகையில் முஸ்லிம் மக்களுக்கு நன்றி சொல்கின்றேன் என்றார்.

அமைச்சர் ஜோன் அமரதுங்க உரையாற்றுகையில் எமது அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் நாட்டில் பல்வேறு அபிவிருத்திகள் நடைபெறுகின்றது. குறிப்பாக சமுர்த்தி அமைச்சை அமைச்சர் தயாகமகே பொறுப்பேற்றதன் பின்னர் 6 இலட்சம் பேருக்கு புதிய சமுர்த்தி முத்திரைகளை வழங்கியுள்ளார்.

அரச வங்கிகளில் சென்று கடனுக்காக அலைவது தவிர்க்கப்பட்டு இன்று சமுர்த்திவங்களினூடாக இலகுவாக கடனைபெற்றுக் கொள்கின்றனர். அதற்காக அமைச்சர் தயாகமகேவிற்கு நாட்டுமக்கள் அனைவரும் நன்றிசொல்லவேண்டும் என்றார்.

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Tue, 07/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை