புதிய அரசியலமைப்பு பற்றி பேசுவது முட்டாள் தனம்

தேர்தலுக்கு சில மாதங்கள்

வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாதொழித்து விட்டது. அதற்கான முழுப்பொறுப்பை சுமந்திரன் எம்.பியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஐ.தே க. அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பதனால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும் என்ன கிடைத்ததென்பதனைக் கூற முடியுமா? என்றும் சபையில் எதிர்க்கட்சித் தலைவர் கோள்வி எழுப்பினார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் புதிய அரசிலமைப்பு திருத்தம் தொடர்பில் பேசுவது முட்டாள்தனம் என சுட்டிக்காட்டியதோடு அடுத்துவரும் தமது ஆட்சியில் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமெனவும் அவர் சபையில் உறுதியளித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற புதிய அரசிலமைப்பு தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ,

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஒரு,சில மாதங்களே உள்ள நிலையில், இந்த புதிய அரசிலமைப்பு தொடர்பான விவாதம் அவசியமற்றது.

ஒரு சில மாதங்களுக்குள் அரசிலமைப்பை திருத்த முடியுமா? எவ்வாறெனினும் அவ்வாறானதொரு திருத்தத்துக்கு நாம் ஆதரவளிக்கப் போவதில்லை. அரசியலமைப்பை திருத்த வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்புக்கு போக வேண்டுமென நாம் தெரிவித்திருந்தோம். ஆனால் அதனை அவர்கள் நிராகரித்தனர். மக்கள் கருத்தைக் கேட்காது திருத்தம் செய்ய முடியாது. அரசியலமைப்பு திருத்தம் என்ற பெயரில் இவர்கள் இப்போது மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

13 பிளஸ்சுக்கு நான் இணங்கினேன்.அதில் நாட்டை பிளவுபடுத்தும் திட்டம் இல்லை. ஆனால் இவர்கள் மேற்கொள்ளவுள்ள திருத்தத்தின்படி, புதிய நாடுகள் உருவாகும் ஆபத்துக்கள் இருந்தன. மாகாணங்கள் பிரியும் நிலைமைகளும் இருந்தன. அடுத்துவரும் எமது ஆட்சியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இல்லாதொழித்துவிட்டது. இதற்கான முழுப்பொறுப்பையும் சுமந்திரன் எம்.பியே ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போது கிழக்கு மாகாண சபையும் இல்லை. வடக்கு மாகாண சபையும் இல்லை.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

Sat, 07/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை