பேஸ்புக் அலுவலகத்திற்கு வந்த நச்சு இரசாயனத்தால் பதற்றம்

பேஸ்புக் அலுவலகத்திற்கு, சரின் என்ற நச்சு இரசாயனம் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மென்லோ பார்க் என்ற இடத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அதற்கு அருகிலேயே அந்நிறுவனத்தின் பண்டக சாலையும் உள்ளது. பேஸ்புக் அலுவலகத்திற்கு வரும் அஞ்சல்கள் மற்றும் பொதிகள் அங்கு வைத்து பரிசோதிக்கப்படுவது வழக்கம்.

கடந்த திங்களன்று வந்த பொதி ஒன்றை பரிசோதித்த போது, அதில் நச்சு இரசாயனமான சரின் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக பேஸ்புக்கிற்கு சொந்தமான 4 கட்டிடங்களில் இருந்தும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள், சரின் இரசாயன பொதியை கையாண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று சோதனை செய்தனர்.

பாதிப்புக்கான அறிகுறிகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சரின் இருப்பதாகக் கூறப்படும் பொதியை குறித்து ஆராய்ந்து வருகின்றனர். சான் பிரான்சிஸ்கோவில் இருந்து எப்.பி.ஐ அதிகாரிகளும் விரைந்துள்ளனர். சரின் என்பது நரம்பு மண்டலத்தை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் நச்சு அமிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 07/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை