சம்சுங் மடக்கும் திறன்பேசி செப்டெம்பரில் அறிமுகம்

சம்சுங்கின் முதல் மடக்கக்கூடிய திறன்பேசியான கெலக்சி போல்ட் செப்டம்பரில் அறிமுகம் செய்யப்படவுள்ளதோடு அது முதலில் குறிப்பிட்ட சந்தைகளில் மட்டுமே விற்பனைக்கு வரும்.

திறன்பேசியின் தொடுதிரையில் கோளாறு உள்ளதாக வந்த புகார்களைத் தொடர்ந்து முதற்கட்டமாக விநியோகிக்கப்பட்ட கைத்தொலைபேசிகளை நிறுவனம் மீட்டுக்கொண்டது.

திறன்பேசியில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சம்சுங் நிறுவனம் தெரிவித்தது. அதன் விலை சுமார் 2,000 டொலர்களாகும். வெளியீட்டுக்கு முன் இறுதிக் கட்டச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

Fri, 07/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை