மகளிர் உலகக் கிண்ணம்: அமெரிக்கா அரையிறுதியில்

பிரான்சில் நடைபெற்று வரும் பிஃபா மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் அரை இறுதியில் விளையாட அமெரிக்க அணி தகுதி பெற்றது. 2ஆவது கால் இறுதியில் பிரான்ஸ் அணியுடன் மோதிய அமெரிக்கா 2–1 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. அந்த அணியின் மேகான் ரேப்பினோ 5ஆவது நிமிடம் மற்றும் 65ஆவது நிமிடத்தில் கோல் போட்டார். பிரான்ஸ் வீராங்கனை வெண்டி ரெனார்ட் 81ஆவது நிமிடத்தில் ஆறுதல் கோல் அடித்தார்

. அமெரிக்காவின் மேகான் ரேப்பினோ சிறந்த வீராங்கனை விருது பெற்றார். ஜூலை 2ஆம் திகதி நடைபெற உள்ள முதல் அரை இறுதியில் இங்கிலாந்து – அமெரிக்கா மோதுகின்றன.

Mon, 07/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை