ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து பேசிய பின்னரே பதவியேற்பு

சமூகத்தின் அபிலாஷைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில், ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் மீண்டும் சந்தித்து பேசிய பின்னரே அமைச்சு பதவிகளை பொறுப்பேற்தென தாம் முடிவு செய்துள்ளதாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிய தலைவர் ஏ.எச்.எம் பெளசி தெரிவித்தார்.

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சு பொறுப்புக்களை ஏற்பதற்கு நேற்று (26) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்புக்கள் வந்திருந்த போதும் நேற்று முன்தினம் மாலை தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்களான ஹக்கீம், ரிஷாத் ஆகியோர் ஜனாதிபதி செயலகத்தின் அழைப்பு தொடர்பில் சந்தித்து விரிவாக பேசியதை அடுத்தே இவ்வாறு ஒருமித்த முடிவை மேற்கொண்டோம் என ஏ.எச்.எம் பெளசி தெரிவித்தார். அந்த வகையில் நேற்றுக் காலை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முடியாத நிலைமையை ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்துவதெனவும் அது தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து எமது ஒட்டுமொத்த முடிவை தெளிவுபடுத்துமாறும் நானும் ஹக்கீமும் (25) இரவு ரிஷாத் பதியுதீனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

எமது வேண்டுகோளை ஏற்று நேற்று (26) காலை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியை சந்தித்து பதவியை துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பதவி ஏற்க முடியாத சூழ்நிலை தொடர்பில் எமது நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்ததுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான மீண்டுமொரு சந்திப்பின் பின்னர் பிறிதொரு தினத்தில் அது பற்றி தீர்மானித்துக்கொள்ள முடியும் எனவும் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியிடம் தெரிவித்தார் என்றும் ஏ.எச்.எம்.பௌஸி தெரிவித்துள்ளார்.

 

 

Sat, 07/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை