வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்ட போட்டி

தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தை, இலங்கையின் வர்த்தகத் துறையினரிடையே பிரபல்யப்படுத்தும் நோக்கிலும், நிறுவனங்களிடையே புரிந்துணர்வை அதிகரிக்கும் வகையிலும், இலங்கை வர்த்தக கரப்பந்தாட்ட சங்கம், வருடாந்த வர்த்தக கரப்பந்தாட்ட சுற்றுத் தொடரை 2019 ஆம் ஆண்டிலும் ஏற்பாடு செய்துள்ளது.

வர்த்தக நிறுவனங்களில் சேவையாற்றும் ஊழியர்களின் மனதில் ஏற்படக்கூடிய ஒரே விதமான தன்மையை இல்லாதொழித்து, மன அழுத்தத்தைக் குறைத்து, தொழிலில் மாத்திரமன்றி விளையாட்டுக்களிலும் அவர்களை ஈடுபடுத்தி அவர்களுக்கு சிறந்த மன நிலையைப் பெற்றுக்கொடுப்பது இந்தப் போட்டித் தொடரின் நோக்கமாகும். வொலிபோலை ஒரு அணி என்ற வகையில் விளையாடும் போது, அவர்களுக்கிடையிலான பிணைப்பு அதிகரிக்கிறது. இதனால் நிறுவனத்திற்குள் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடிகிறது. போட்டியானது, தேசிய சட்டதிட்டங்களுக்கு அமைவான முறையில் நடைபெறும். இதில் ஆண், பெண் இரு பாலாரும் பங்குபற்றுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. 2012 ஆம் ஆண்டில் 50 அணிகளின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்பட்ட கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி தனது 8வது ஆண்டு நிகழ்வைக் கொண்டாடுகிறது. இம்முறை ஆண்கள், பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வருடத்திற்கான சம்பியன்ஷிப் போட்டியை ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பொது முகாமையாளர் லக்மால் ஜயசிங்க தலைமையிலான உணர்ச்சி பூர்வமான உற்சாகமான குழுவுடன் இலங்கையில் புகழ்பெற்ற பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றும் ஒரு நிர்வாகக் குழு ஏற்பாடு செய்துள்ளது.

தேசிய விதிகள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு அமைய போட்டி இடம்பெறும். 2019 ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த அமைப்புக்களைச் சேர்ந்த ஊழியர்கள் இதில் பங்கேற்புச் செய்வதற்கு தகுதியுடையவர்களாவர்.

ஆரம்பக்கட்ட சுற்றுப் போட்டிகள் 2019 ஆம் ஆண்டில் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் செப்டம்பர் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இறுதிப் போட்டிகள் மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்ளக அரங்கில் நவம்பர் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் இடம்பெறும்.

சுற்றுத் தொடர்கள் சுப்பர் லீக், சம்பியன்ஷிப் மற்றும் டிவிஷன் ஏ ஆகிய மூன்று பிரிவுகளில் இடம்பெறும். மொத்தப் பரிசுத் தொகை 01 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். ஒவ்வொரு பிரிவிலும் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற சிறந்த அமைப்பாளர், சிறந்த எதிர்ப்பாளர் மற்றும் வெற்றியாளர்களுக்கு (ஆண் மற்றும் பெண்) கிண்ணங்களுக்கு மேலதிகமாக மோட்டார் சைக்கிள்களும் பரிசாக வழங்கப்படும். மேலும், சிறந்த சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்றுவதில் சிறந்த தடுப்பாளர், சிறந்த பெறுநர், சிறந்த சேவையாளர் ஆகிய சுப்பர் லீக் வகைகளுக்கு சிறந்த லிபரோ கிண்ணங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

Tue, 07/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை