திருக்கேதீச்சர ஆலய வளைவு விரைவில் நிர்மாணிக்கப்படும்

இந்து அமைப்புக்கள் தீர்மானம்

திருக்கேதீச்சர ஆலய நுழைவு வீதியில் அமைக்கப்பட்ட வளைவு கத்தோலிக்கர்களால் அகற்றப்பட்டமை மிகப் பெரிய தவறு. இந்த நிலையில் விரைவில் புதிய நிரந்தர வளைவு அமைக்கப்படும். இதற்கு தடை ஏற்படுத்தப்படும் பட்சத்தில், நாட்டில் உள்ள இந்து அமைப்புக்கள், இந்து மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி பாரிய எதிர்ப்புப் பேரணியினை மேற்கொள்வோம் என அகில இலங்கை இந்து மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருக்கேதீச்சர வளைவு அமைப்பது தொடர்பில் இந்து அமைப்புக்களுடன் ஆராயும் கூட்டம் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள இந்து மாமன்றத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. இக் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் பரவியிருந்த, இந்து மதம் இன்று 8 மாவட்டங்களுக்குள்ளும் சுருக்கப்பட்டுள்ளன. இதனை மேலும் சுருக்குவதற்கு அனுமதிக்க முடியாது. இந்து மக்களின் பழமைவாய்ந்த வழிபாட்டுத் தலங்களில் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான திருக்கேதீச்சரம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆலயத்திற்கு உரித்தான பகுதியில் அதற்கான நிரந்தர வளைவு அமைக்கப்படுவதற்கு யாரும் தடையேற்படுத்த முடியாது.

மேலும் ஆலய வளைவு அமைப்பதற்கு முன்னர் அனுமதி வழங்கிய மன்னார் பிரதே சபை, மன்னார் ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க ஆறு நாட்களுக்குள் இடைக்கால தடை விதித்த செயற்பாடு நியாயமானதல்ல. இந்து மதம் அன்பையும், ஒற்றுமையினையும் போதிக்கின்றது. ஆகவே அவற்றுக்கு மதிப்பளித்து மிக விரைவில் புதிய அவளைவு அமைக்கப்படும்.

நல்லூர் விசேட நிருபர்

Mon, 07/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை