மலேசிய முன்னாள் மன்னர் விவாகரத்து

முன்னாள் மலேசிய மன்னர் சுல்தான் மொஹமது, ரஷ்ய அழகியான தனது மனைவியை அவர்களின் மகன் பிறந்து ஒருசில வாரங்களில் விவாகரத்து செய்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் கடந்த நவம்பரில் 50 வயது சுல்தான் மற்றும் 27 வயதான ரிஹானா ஒக்சான் வொவொடினா திருமணம் புரிந்தது மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் பெயரளவிலான தனது மன்னர் பட்டத்தையும் இராஜினாமா செய்தார்.

கடந்த ஜூலை 1ஆம் திகதியன்று அவர்களது விவாகரத்து பதிவு செய்யப்பட்டதாக ‘த நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. முத்தலாக் முறையில் செய்யப்பட்ட அந்த விவாகரத்து சிங்கப்பூரில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

Thu, 07/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை