தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஜனாதிபதியைச் சந்திக்க முடிவு

மாகாண சபை தேர்தலா?;  ஜனாதிபதித் தேர்தலா?

தேர்தல்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தினகரனுக்குத் தெரிவித்தார்.

“ஜனாதிபதி அழைத்தால் எந்நேரமும் அவரைச் சந்தித்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றேன்” என அவர் கூறினார். எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், “எதற்கும் எங்களுக்குக் கால அவகாசம் அவசியம். கடைசிநேர அறிவிப்புக்கள் வந்தால்

எங்களுக்குச் சிரமமாக இருக்கும்” என்றார்.

மாகாணசபைத் தேர்தல், பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல்களை கிரமமாக நடத்தியே ஆக வேண்டும். என்றாலும் எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்பதில் ஒரு சங்கடமான நிலை இருக்கின்றது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாக இருந்தால் உரிய காலத்தில் நடத்துவதற்கான அதிகாரம் தனக்கு இருப்பதாகக் கூறும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர், அதற்கான வர்த்தமானி அறிவிப்பை செப்டம்பர் 15இல் வெளியிடக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

தனது பதவிக்காலம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதில்லையென ஜனாதிபதி முடிவெடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. அதேநேரம், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் யோசனையையும் கைவிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவதற்கான சாத்தியங்களே இருப்பதாகவும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

எம். ஏ. எம். நிலாம்

Mon, 07/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை