கதிர்காம கந்தன் ஆடிவேல் உற்சவம் இன்று ஆரம்பம்

கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் இன்று (03) ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை தொடர்ச்சியாக 14 நாட்கள் நடைபெறவுள்ளதாக கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று தொடக்கம் ஒவ்வொருநாள் இரவும் பெரஹரா வீதிஉலா வரவுள்ளது. இறுதி ரன்தோலி பெரஹரா இம்மாதம் 16ஆம் திகதி வீதி உலா வரவுள்ளது. பெரஹரா சம்பிரதாய கலை கலாசார அம்சங்களை உள்ளடக்கியுள்ளமை விசேட அம்சமாகும். எதிர்வரும் 17 ஆம் திகதி மாணிக்க கங்கையில் இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் வரலாற்று சிறப்புமிகு விழா நிறைவு பெறவுள்ளது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் கலந்துகொள்ளும் சகல பக்தர்களின் நலன் கருதி பாதுகாப்பு, அடிப்படை வசதிகளோடு பல்வேறு சுகாதார நலத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கடமைகளில் பொலிஸ், இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்புஅதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலந்துகொள்ளும் பக்தர்களுக்காக நாடுபூராவுமிருந்தும் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஸ தெரிவித்தார்.

 ஹம்பாந்​ேதாட்டை குறூப் நிருபர்

Wed, 07/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை