‘கூகுள் டிரான்சிட்’ வலையமைப்புக்குள் பொது போக்குவரத்து தகவல்கள் தரவேற்றம்

நாட்டின் பொது போக்குவரத்து துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அதன் தரவுகள் நேற்று முதல் கூகுள் மயப்படுத்தப்பட்டுள்ளன (டிரான்ஸிட் கூகுள்மெப்).

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 25ஆவது வருட பூர்த்தியை கொண்டாடும் வகையில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நேற்று இதனை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். தற்போது கூகுள் சேவையில் தனியார் போக்குவரத்து பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடிவதால் பயணிகள் பாரிய நன்மைகளை எதிர்கொள்ள முடிகின்றது.

அதேவகையில் பொது போக்குவரத்து தொடர்பான தகவல்களையும் மக்கள் பெற்று பயனடையும் வகையிலேயே அமைச்சர் நேற்று இந்த தகவல்களை தரவேற்றம் செய்து வைத்தார்.

கூகுள் இத் தரவுகளை நன்கு அவதானித்து வெகு விரைவில் இணையத்துக்கு செய்திகளை வழங்கும். இதனடிப்படையில் கூகுள் டிரான்ஸிட் மூலம் முதற்கட்டமாக மேல் மாகாணத்திலுள்ள பொது போக்குவரத்து பற்றிய தகவல்களை மக்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்குமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கமைய இந்த கூகுள் டிரான்ஸிட்டானது 369 ரயில் பாதைகள், 207 மேல் மாகாண போக்குவரத்து முகவர் நிலையங்கள், 209 தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வீதிகள் உள்ளிட்ட 785 வீதிகள் 11,000 பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களை உள்ளடக்கியதாக அமையும்.

போக்குவரத்து வழிமுறைகள், பஸ் தரிப்பிடங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் நடைபாதைகள் குறித்தும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

பஸ்களில் ஜீ.பி.ஸ் பொருத்தப்பட்டால் அந்த பஸ் இருக்கும் இடம் வந்தடையும் நேரம் ஆகியவற்றை இலகுவில் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்குமென்றும் அமைச்சர் தெரிவித்தார். பொது போக்குவரத்து பற்றிய தகவல்கள் நேற்று உத்தியோகப்பூர்வமாக தரவேற்றம் செய்து வைக்கப்பட்டபோதும் இது வெகுவிரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

 

 

Sat, 07/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை