வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் திருக்கோவிலில் விசேட பூசை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணியினால் விசேட பூஜை நேற்று நடாத்தப்பட்டது.

இங்கு நடைபெற்ற பூஜையின் பின்னர் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவி இன்று நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றி எமது குறைகளை இறைவனிடம் மன்றாடும் வகையில் மேற்கொண்டு எமது உறவுகளை பெற்றுக்கொள்ளலாம் எனும் நோக்கில் இவ்விசேட தேங்காய் உடைக்கும் பூஜை ஒன்றிணை ஏற்பாடு செய்திருந்தோம்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பின்னர் எமது போராட்டம் மாதாந்தம் 30 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது அத்துடன் இக்குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் அரசாங்கம் உடனடியாக இழப்பீடுகள் மற்றும் கொடுப்பனவுகள் என்பனவற்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். ஆனால் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் சென்றுள்ள நிலையில் ஏன் எமது உறவுகளை தேடிக்கண்டு பிடிக்கும் வசதிகளை செய்யவில்லை. அவர்களுக்கு ஒரு நீதி எமக்கு ஒரு நீதியாகவுள்ளது.

யுத்தக்குற்றம் தொடர்பாகவும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் சரியான முறையில் விசாரணை செய்து ஒரு தீர்க்கமான முடிவினை பெற்றுத்தரவேண்டும் என வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைதீவு குறூப் நிருபர்

Tue, 07/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை