ஈரானுடனான பதற்றம் குறித்து பிரிட்டனில் அவசரக் கூட்டம்

பிரிட்டனுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலை ஈரான், ஹார்முஸ் நீரிணையில் கைப்பற்றிய விவகாரம் குறித்து விவாதிக்க பிரிட்டிஷ் பிரதமர் திரேசா மே நேற்று அவசரக் கூட்டம் நடத்தினார்.

அது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிரிட்டன் ஆலோசித்து வந்ததாக அதிகாரிகள் கூறினர். ஆனால் மேற்கொள்ளக்கூடிய சிறந்த நடவடிக்கைகள் குறைவே என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் பிரிட்டிஷ் போர்க் கப்பல் விடுத்த எச்சரிக்கையையும் மீறி ஈரானியப் புரட்சிப் படையினர் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பலை ஹார்மூஸ் நீரிணையில் கைப்பற்றியதைக் காட்டும் வீடியோவை பிரிட்டிஷ் அதிகாரிகள் கண்டனர்.

கைப்பற்றப்பட்ட பிரிட்டிஷ் கப்பல் ஈரானின் பண்டார் அபாஸ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் இருந்த 23 ஊழியர்களும் வெளியேற்றப்பட்டு அதில் ஈரானிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

Tue, 07/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை