ஓமானுக்கான இலங்கை தூதுவர் கடமைகள் பொறுப்பேற்பு

ஓமானுக்கான புதிய இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஓ.எல். அமீர் அஜ்வத், அண்மையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் ெகாண்டார்.

ஓமான் தலைநகர் மஸ்கடிலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் இடம்பெற்ற சிறிய நிகழ்வொன்றின் போதே இவர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை மேலும் பலப்படுத்தல், தொழில் வாய்ப்பு, வர்த்தகம், முதலீடுகள் மற்றும் சுற்றுலா மேம்படுத்தல் ஆகிய துறைகளில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக இதன்போது புதிய தூதுவர் தெரிவித்தார்.

1998ஆம் ஆண்டு இலங்கை வெளிநாட்டு சேவையில் இணைந்துகொண்ட இவர், சிங்கப்பூர் மற்றும் பூரூனே ஆகியவற்றுக்கான பதில் இலங்கை உயர் ஸ்தானிகராகவும், இந்தியாவின் சென்னைக்கான பிரதி உயர் ஸ்தானிகராகவும் ஏற்கனவே இவர் கடமையாற்றியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக சவூதி அரேபியாவின் றியாதிலுள்ள இலங்கை தூதுவராலயம், ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாட்டுக்கான இலங்கையின் நிரந்தர அலுவலகம் ஆகியவற்றிலும் இவர் கடமையாற்றியுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டமுதுமாணியான இவர், பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பட்டதாரியுமாவார்.

Wed, 07/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை