அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுப்பது கூட்டமைப்பின் சுயநலத்தையே காட்டுகிறது

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு சாதாரண கணக்காளர் ஒருவரை நியமிக்க முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கரமசிங்கவின் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுப்பது கூட்டமைப்பின் சுயநலத்தையே காட்டுகின்றது.

கல்முனை விடயத்தில் முஸ்லிம் தரப்பு பிசாசாக நின்றால் கூட்டமைப்பு பேயாக நிற்கவேண்டும். அம்மக்களின் முப்பதுவருட கனவை நிறைவேற்றிக்கொடுக்கவேண்டும்என ஈழத்தமிழர் சுயாட்சி முன்னேற்றக்கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

கல்முனைக்கு விஜயம் மேற்கொண்ட அவர் இங்கு நடத்திய ஊடகச்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை, திருமலை கன்னியா பிரச்சினை, வடக்கில் முளைக்கும் பௌத்த விகாரைகள் தொடர்பில் ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையைக் கூட எடுக்க முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதற்காக அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்கின்றனர்.

இங்கு நடைபெறுகின்ற ஒவ்வொரு அரசியல் குழப்பத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அரசுக்கு பெரும்பான்மையைக் கொடுக்கின்றது.

கல்முனை பிரதேச செயலகத்திற்கு ஒரு கணக்காளரைக்கூட நியமிக்க முடியாத கூட்டமைப்பினர் எவ்வாறு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைப்பெற்றுத்தரப்போகின்றனர்.

தங்களுடைய வெற்றிக்காக மக்களை ஏமாற்றுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்க கூடாது. கம்​ெபரலிய வேலைத்திட்டத்தில் வீதிகளைப்போடுகின்னர். மக்கள் பிரச்சினையை விட்டுவிட்டனர். பெரும்பான்மை பலத்தைக்கொண்டு மாகாண சபைத்தேர்தலை ஏன் நடத்தாதுள்ளனர். இதை ஏன் கூட்டமைப்பு அரசிடம் கேட்காதுள்ளது. மத்தியரசு தீர்மானிப்தையே மாகாணத்தில் அரசு நடைமுறைப்படுத்துகின்றது.

வடக்கில் நாவற்குழி புத்தவிகாரை வைக்கக்கூடாது என வடமாகாண சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இன்று வட மாகாண சபை கலைந்து பத்து மாதங்கள் கூட கழியாத நிலையில் நாவற்குழியில் பௌத்த விகாரை கட்டப்பட்டு கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து முண்டுகொடுப்பது எதற்காக பிரதமர் சொன்ன வாக்கு எதனையும் நிறைவேற்ற வில்லை. கல்முனை கணக்காளர் விடயங்கள் கூட நிறைவேற்ற வில்லை.

தற்போது நிர்வாகச் சிக்கல் வரும் என்று கூறுகின்றனர். எல்லை நிர்ணயம் செய்த பிறகு தான் இதனை தரம் உயர்த்தலாம் என்கின்றனர். நான் கேட்கிறேன் இலங்கையிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களும் எல்லை நிர்ணயம் செய்த பிறகா தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

பாண்டிருப்பு தினகரன் நிருபர்

 

Tue, 07/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை