இத்தாலி தீவிர வலதுசாரிகள் இடமிருந்து ஏவுகணை பறிமுதல்

இத்தாலியில் தீவிர வலதுசாரி கடும்போக்கு குழு ஒன்றிடம் இருந்து ஏவுகணை மற்றும் அதிநவீன ஆயுதங்களை பங்கரவாத தடுப்பு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு நவ நாஜி பிரசார பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கிழக்கு உக்ரைன் மோதலில் இத்தாலி தீவிர வலதுசாரிகளுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஏவுகணை கட்டார் ஆயுதப் படையுடையது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் இணைந்து போரிட்ட இத்தாலி நாட்டவர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே வடக்கு இத்தாலியில் இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும் இந்த சம்பவம் குறித்து இத்தாலியின் வலதுசாரி உள்துறை அமைச்சர் மட்டியோ சல்வினி அமைதி காத்து வரும் நிலையில், எதிர்க்கட்சியான மைய இடதுசாரி ஜனநாயகக் கட்சி, தீவிர வலதுசாரி கடும்போக்காளர்களை முறியடிக்க நடவடிக்கை எடுக்கும்படி அழுத்தம் கொடுத்து வருகிறது.

Wed, 07/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை