இலங்கை அணியில் அதிரடி மாற்றங்கள் குறித்து அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு தொடரின் முடிவில் இலங்கைக்கு புதிய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் இருப்பார் என்று இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்த இலங்கை கிரிக்கெட் தலைவர் சில்வா, நாங்கள் முழு பயிற்சித் துறையையும் புதுப்பித்து வருகிறோம், அனைவரையும் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டோம். 99 சதவீத பயிற்சியாளர்களின் ஒப்பந்தங்கள் இந்த மாத இறுதியில் முடிவடைகின்றன.

புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவர்கள் ஆர்வமாக இருந்தால் அவர்கள் மீண்டும் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அதை நாங்கள் மதிப்பீடு செய்வோம். அந்தந்த பதவிகளுக்கு யார் தகுதியானவர் என்று பார்ப்போம்.

தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்கவின் ஒப்பந்தம் மட்டுமே அடுத்த ஆண்டு டிசம்பர் வரை நீடிக்கிறது. மேலும், நாங்கள் அவருடன் கலந்துரையாடி விளையாட்டு அமைச்சருக்கு தகவல் தெரிவிப்போம் என்று சில்வா கூறினார்.

2019 கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு பின்னர் தேசிய அணியின் முழு பயிற்சி ஊழியர்களையும் மாற்றுமாறு விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திக்கவும் ஒரு இலங்கையர். எனவே அவரை அப்படியே வெளியேற்ற நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் அவருடன் கலந்துரையாடுவோம், அதை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதைப் பார்ப்போம் என்றார் சில்வா.

ஹதுருசிங்க தலைமை பயிற்சியாளராக தொடராவிட்டால் அவரது ஒப்பந்தம் காலாவதியாகும் வரை இலங்கை கிரிக்கெட்டின் வேறு பயிற்சியாளராக பணியாற்றுமாறு கேட்கப்படலாம் என சில்வா கூறினார்.

Mon, 07/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை