வேகத்தின் சினிமா

Central Intelligence

புதிய தொழில்நுட்பத்தினுடைய கண்டு பிடிப்புக்கள், வரலாறுகளைச் சொல்லுவதற்கு அவை ஆற்றிய மிகப் பெரும் பங்குகள் என்பன சினிமாவினை உலக தரத்திற்கு இட்டுச் சென்றன. அன்றிலிருந்து இன்று வரை சினிமாவானது குறித்த ஒரு வரைவிலக்கணத்திற்கு உள்ளாக மாத்திரம் அளவிடப்படாமல் பல்வேறுபட்ட கோணங்களில் தன்னுடைய வளர்ச்சியினை நிரூபித்திருப்பதை நாம் அவதானிக்கலாம். 

மசாலத் திரைப்பட முறையினுள் காத்திரமான கதை நுட்பங்களை சேர்த்த திரைப்படங்களுள் Central Intelligence விசித்தரமான படைப்பாகும். கல்லூரியில் கற்கின்ற இரண்டு மாணவர்களுக்கிடையே ஏற்படும் மானம் காக்கின்ற நட்பு பின்னாளில் எவ்வாறு நாட்டை காப்பதற்கு உதவியது என்பதே இத்திரைப்படத்தின் கதை. ஆங்கிலத் திரைப்படங்களின் பிரபல்ய கதாநாயகர்களான Johnson> Kevin Hart எனும் இரண்டு சிகரங்களின் நக்கல், நையாண்டியுடன் நகர்ந்து செல்லும் குதூகலக் காட்சிப் படைப்பே இத்திரைப்படமாகும். பழமையான பாடசாலை ஞாபகங்களை மறக்காமலும், அங்கு கிடைக்கின்ற அங்கீகாரமே உலகின் பெரு மகிழ்விற்குரிய அங்கீகாரமாகவும் உணர்வினைப் பாய்ச்சியிருக்கிறது இச் சினிமா. ஒரு போராட்டத்தினுடைய வலிகளையும், அப்போராட்டம் எதிர் கொள்ளும் எதிர் வினைகளையும், போராட்டத்தின் முடிவினை சரியாகத் தீர்மானிக்கின்ற குழப்பத்திலும் நகர்ந்து செல்கின்ற இத்திரைப்படத்தின் காட்சியமைப்புக்கள் மிக வித்தியாசமானவை. திரைப்படங்களைப் பொறுத்தவரை அது மிகப் பிரமாண்டமான ரசனையாளர்கள் பரப்பினைக் கொண்டது. அதிலிருந்து ஏராளமான விமர்சனங்களை எம்மால் கண்டு கொள்ள முடியும். மிக விசாலமான பரப்பிலிருந்து வெளிப்படுகின்ற சினிமா விமர்சனங்களே உலகத் திரைப்பட வரிசைக்கு பல சினிமாக்களை கொண்டு சேர்த்திருக்கின்றன எனலாம். 

ஒரு திரைப்படத்தின் வருகைக்கு முன்னர் அத்திரைப்படம் பற்றிய கருத்தாடல்களும், விளம்பரங்களும், நேர்காணல்களும் திரைப்படம் மீதான அதீத நம்பிக்கையினை ஏற்படுத்தும். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மிக அண்மையில் வெளிவந்த Central Intelligence வசூலில் சாதனை படைத்த படைப்பாகும். குதூகலமான ஒரு கதையில் ரசிக நினைவிற்கு அப்பாலான திடீர் திருப்பங்களை இத்திரைப்படத்தில் மிக அதிகமாகவே ரசிக்க முடியும். இரு கதாப்பாத்திரங்களின் இணைவு. அவை நுகர்வோர் மத்தியில் ஏற்படுத்துகின்ற கலகலப்பு என்பன சினிமாவினை நுகர்கின்ற அனைத்துப் பரம்பலினையும் வசியப்படுத்தும் மந்திரமாகும்.

இன்ன அடையாளங்களுடன் பிரகடனப்படுத்தப்பட்ட படைப்பு என்பதினையும் தாண்டி எல்லா வகையான கலவைகளுடனும் பெரும் அதிர்வுமிக்க கருத்தினை வெளிக்காட்டும் சினிமாவே மாற்றியல் அடையாளமாகும். இதே நையாண்டிப் பாவனையுடன் வெளிவந்து வெற்றி நடை போட்ட Central Intelligence ஒரு குதூகலப் படைப்பாகும்... 

Sat, 07/13/2019 - 09:05


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக