இந்திய அணி தோல்வி அடைய இதுவே முக்கிய காரணம்-

விராட் கோலி

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதற்கான முக்கிய காரணத்தை விராட் கோலி தனது கூறினார்.

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்த ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது.

இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 306 ஓட்டங்கள் மட்டுமே அடித்தது.

இதனால் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

உலக கிண்ண 2019ம் ஆண்டுக்கான கிரிக்கெட் தொடரில் இதுவே இந்திய அணியின் முதல் தோல்வி ஆகும். இது குறித்து இந்திய அணியின் தலைவர் விராட் கோலி கூறியதாவது:

இங்கிலாந்து உடனான போட்டியில், நாணயச்சுழற்சி மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது. மேலும் முக்கியமாக பவுண்டரியின் அளவு மிகவும் குறைவாக இருந்தது.

உலக கிண்ணத்தில் மிகவும் குறைந்த அளவான 59 மீற்றர் தூரம் மட்டுமே பவுண்டரி இருந்தது.

இதுபோன்ற சூழலை இந்திய அணி எதிர்கொள்வது இதுவே முதன்முறையாகும். இந்த சிறிய பவுண்டரியில் ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்வீப் போன்ற ஷொட்களால் சிக்சர் அடித்தால், ஸ்பின்னர்களால் என்னதான் செய்ய முடியும்?. இதுதான் தோல்விக்கான மிக முக்கிய காரணம்.

மேலும் இப் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் சிறந்து விளையாடினார்கள் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அவர்களது திட்டத்தை நிறைவேற்ற கடுமையாக போராடினார்கள்.

ஒவ்வொரு டீமும், ஒரு கட்டத்தில் தோல்வியை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். கிரிக்கெட் வீரர்களான நாங்கள், இவற்றை கடந்துதான் ஆக வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த போட்டி குறித்து அணி வீரர்களுடன் கலந்து பேசி அடுத்த போட்டியில் எப்படி வெற்றி பெறுவது என நிச்சயம் ஆலோசிக்க வேண்டும்.

Tue, 07/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை