"கனவு மகன்" கவிதை நூல் வெளியீட்டு விழா

பல்துறை ஆளுமை கொண்ட பெண் படைப்பாளி ஓய்வு நிலை ஆசிரியை எம்.ஐ.எப்.மதீனா உம்மா எழுதிய 'கனவு மகன்' கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(21) இடம்பெறவுள்ளது.

பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.ஸ.அஹமட் கியாஸ் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் அஷ்-ஷேய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லா ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, இந்நூல் மீதான நயவுரையை நிகழ்த்தவுள்ளார்.

அக்கரைப்பற்று கல்வி வலய தமிழ்த் துறை உத விக் கல்விப் பணிப்பாளர் கலா நிதி ஹனீபா இஸ்மாயில் இந்நூல் அறிமுக உரையினை நிகழ்த்தவுள்ளார்.

இந்நூலாசிரியர் இதுவரை ஒன்பது நூல்களை எழுதியுள்ளார். கவிதை, இஸ்லாமிய வழிகாட்டும் அம்சங்கள், சிறுகதை, பொது அறிவு, அரபு எழுத்தணி, நிருவாக அறிவுத்துணுக்கு, பாடசாலை மாணவர்களுக்கான தமிழ்மொழி வினா விடை, தமிழ் சிங்கள அகராதி என பல்வேறு நூல்களை இவர் எழுதியுள்ளார்.

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

Wed, 07/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை